ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 2 அக்டோபர் 2023 (13:04 IST)

பைக் சாகசம் செய்த மாணவருக்கு அபராதம்

byke
சாலையில் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் சாகசம் செய்த மாணவருக்கு ரூ.13500 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனர்.

சமீபத்தில் சென்னை – பெங்களூர் சாலையில்  பைக்கில் வீலிங் செய்த யூடியூபர் டிடிஎஃப் வாசனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில், நாகர்கோவில் அருகே தேசிய  நெடுஞ்சாலையில், கல்லூரி மாணவர் ஒருவர் ஆபத்தான வகையில் பைக் சாகசம் செய்து அதனை வீடியோ எடுத்து, தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார்.

வாகன தணிக்கையின்போது, சிக்கினார்… அப்போது அந்த பைக்கை பறிமுதல் செய்த போலீசார் அவருக்கு ரூ.13,500 அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.