வெள்ளி, 7 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 31 ஜனவரி 2025 (08:23 IST)

கடும் எதிர்ப்பு எதிரொலி.. காலை உணவு திட்டத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டம் ரத்து..!

பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு தயாரிக்கும் திட்டத்தை தனியாரிடம் ஒப்படைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்ட நிலையில் இதற்கு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து தற்போது இந்த திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு காலை உணவு தயாரிக்கும் பணியை தனியாருக்கு வழங்குவதற்கான ஒப்பந்தம் கூறும் அறிவிப்பை மாநகராட்சி வெளியிட்ட நிலையில் இதற்கு அதிமுக பாஜக உள்ளிட்ட பல கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் சென்னை மேயர் பிரியா இது குறித்து தெரிவித்தபோது, ‘பள்ளி குழந்தைகளுக்கு உணவு தயாரிக்கும் பணியை தனியாருக்கும் வழங்கும் ஒப்பந்த அறிவிப்பை மாநகராட்சி நிர்வாக ரத்து செய்வதாகவும் மாநகராட்சியே இந்த திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் தமிழக அரசால் நடத்தப்பட்டு வரும் நிலையில் இந்த திட்டத்தின் படி உணவு தயாரிக்க தனியாருக்கு ஒப்பந்தம் கூறும் டெண்டர் சமீபத்தில் விடப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில் தான் தற்போது இந்த திட்டத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவு ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva