சென்னையில் தெரு நாயை பலாத்காரம் செய்த வாலிபர் கைது


bala| Last Updated: திங்கள், 13 மார்ச் 2017 (15:33 IST)
தெரு நாயை பலாத்காரம் வாலிபரை போலீஸார் கைது செய்தனர்.

 

சென்னை மேடவாக்கம் பகுதியில் உள்ள தெரு ஒன்றில் இருந்த பெண் நாயை இளஞர் ஒருவர் பலாத்காரம் செய்வதை பொதுமக்கள் பார்த்தனர். இது குறித்து  உடனடியாக புளூகிராஸ் அமைப்பிற்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து புளூகிராஸ் பொதுமேலாளர் டான் வில்லியம்ஸ் காவல்துறையினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்தார்.

உடனடியாக நாயை பலாத்காரம் செய்த வாலிபரை போலீஸார் கைது செய்தனர். பலாத்காரத்துக்கு உள்ளான நாயை வேப்பேரி கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சோதனை செய்தனர். அதில் அந்த நாய் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

விசாரணையில் கைது செய்யப்பட்ட வாலிபர் பெயர் முருகன் என்பதும், திண்டுக்கல்லைச் சேர்ந்த இவர் லாரி ஓட்டுநர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது பிணையில் வெளிவர முடியாத பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :