1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 19 ஜூலை 2022 (09:53 IST)

பேக்கரியை உடைத்து அல்வா திருடிய ஆசாமிகள்..! – பள்ளிக்கரணையில் பரபரப்பு!

Wheat Halwa
சென்னை அருகே பள்ளிக்கரணையில் பேக்கரியை உடைத்து ஆசாமிகள் அல்வா திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அருகே பள்ளிக்கரணை சாலையில் பேக்கரி மற்றும் ஸ்வீட் ஸ்டால் கடை ஒன்று செயல்பட்டு வந்துள்ளது. நேற்று வழக்கம்போல கடையை இரவு பூட்டிவிட்டு சென்ற நிலையில் காலையில் வந்து பார்த்தபோது கடையின் கதவு உடைக்கப்பட்டிருந்துள்ளது.

இதை கண்டு அதிர்ச்சியடைந்த ஸ்வீட் ஸ்டால் உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஸ்வீட் ஸ்டாலில் இருந்த ரூ.1000 ரொக்கத்தை திருடிய ஆசாமிகள், அங்கிருந்த 5 கிலோ அல்வா, 5 கிலோ முந்திரியையும் திருடி சென்றுள்ளனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் அல்வா திருட்டு ஆசாமிகள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.