Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அந்தஸ்து பார்த்தார்கள் ; தீ வைத்து எரித்தேன் - இந்துஜாவை கொன்ற ஆகாஷ் வாக்குமூலம்


Murugan| Last Modified புதன், 15 நவம்பர் 2017 (16:40 IST)
தன்னை காதலித்து விட்டு திருமணத்திற்கு மறுத்ததால் இந்துஜாவை தீ வைத்து எரித்ததாக வாலிபர் ஆகாஷ் வாக்குமூலம் அளித்துள்ளார்.

 

 
சென்னை ஆதம்பாக்கம் சரஸ்வதி நகரில் வசிக்கும் ரேணுகா என்பவரின் மகள் இந்துஜா என்ற இளம்பெண்ணை, ஆகாஷ் என்ற வாலிபர் பெட்டோல் ஊற்றி எரித்துக்கொன்ற சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட ஆகாஷ் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:
 
நானும் இந்துஜாவும் சிறு வயது முதலே ஒன்றாக பள்ளியில் படித்தோம். எனவே, சிறுவயது முதலே அவரை காதலித்து வந்தேன். நான் கல்லூரிப்படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டேன். ஆனால், இந்துஜா கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வேலைக்கு சென்று கொண்டிருந்தார். நானோ வேலை இல்லாமல் இருந்தேன். 
 
எனவே, என் மீதான காதலை கைவிடுமாறு இந்துஜாவின் பெற்றோர் கண்டித்தனர். இதனால், என்னிடம் பேசுவதை இந்துஜா நிறுத்திக்கொண்டார். என்னை நிராகரிக்கத் தொடங்கினார். பலமுறை அவரிடம் கெஞ்சியும் என் காதலை ஏற்கவில்லை.
 
இந்நிலையில் அன்று இந்துஜாவை எனக்கு திருமணம் செய்து வைக்கும் படி கேட்கவே அவரது வீட்டிற்கு சென்றேன். அவர்கள் மறுத்தால், தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டவே பெட்ரோல் கேனை என்னுடன் எடுத்து சென்றேன். ஆனால், அங்கே ஏதேதோ நடந்து விட்டது.
 
அந்தஸ்து பார்த்து என்னை இந்துஜாவின் தாய் நிராகரித்தார். இதனால், ஆத்திரமடைந்த நான், எனக்கு கிடைக்காதவள் யாருக்கும் கிடைக்கக்கூடாது என  இந்துஜாவின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தேன்” என வாக்குமூலம் அளித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :