வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : ஞாயிறு, 21 ஜனவரி 2018 (14:11 IST)

சிவகாசியில் விஜயகாந்த் மீது கல்வீச்சு

சிவகாசியில் பட்டாசு தொழிலையும், தொழிலாளர்களையும் பாதுகாக்க வலியுறுத்தி தேமுதிக தலைவர் விஜயகாந்த பேசிய போது மேடையை நோக்கி சிலர் கற்களை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

 
பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதாகக் கூறி, நாடு முழுவதிலும் பட்டாசு உற்பத்தி, விற்பனைக்கு தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனால் கடந்த டிசம்பர் 26ஆம் தேதி முதல் சிவகாசியில் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடந்தது. இந்த வேலைநிறுத்தத்திற்கு அனைத்துக் கட்சிகள் மற்றும் அனைத்து வணிகர் சங்கங்களும் ஆதரவு அளித்தனர்.
 
நேற்று தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அளித்த உறுதியை ஏற்று தற்போது வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்படுவதாக பட்டாசு ஆலை உரிமையாளர்கள் அறிவித்தனர். இந்நிலையில் அவர்களின்ன் பிரச்சனையை தீர்க்க வலியுறுத்தி தேமுதிக சார்பில் இன்று காலை ஆர்பாட்டம் நடைபெற்றது. 
 
இதில் கலந்து கொண்டு பேசிய விஜயகாந்த, மத்திய, மாநில அரசுகளை கண்டித்து பேஎசினார். அப்போது திடீரென சிலர் மேடையை நோக்கி கற்களை வீசியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.