வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: வியாழன், 9 ஜனவரி 2020 (15:40 IST)

மறைமுக தேர்தல் வீடியோ பதிவு செய்யப்படும்; தேர்தல் ஆணையம் பதில்

வருகிற ஜனவரி 11 ஆம் நடைபெறவுள்ள மறைமுக தேர்தலை வீடியோ பதிவு செய்யப்படும் என மாநில தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது

கடந்த டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில், ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. பின்பு கடந்த ஜனவரி 2 மற்றும் 3 ஆகிய இரு தேதிகளிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் பெரும்பான்மையான இடங்களின் திமுக வென்றது.

இதனிடையே மாவட்ட ஊராட்சி தலைவர் மற்றும் ஒன்றிய தலைவருக்கான மறைமுக தேர்தல் விரைவில் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனை தொடர்ந்து மறைமுக தேர்தலை வீடியோ பதிவு செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக முறையிட்டது.

இந்நிலையில் வருகிற ஜனவரி 11 ஆம் தேதி நடைபெறவுள்ள மாவட்ட ஊராட்சி தலைவர் மற்றும் ஒன்றியத் தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தலை வீடியோ பதிவு செய்யப்படும் என மாநில தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது.