1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 10 நவம்பர் 2018 (11:06 IST)

ஸ்டாலின் சிறந்த தலைவர் : சந்திரபாபு நாயுடு

தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு நீண்ட நாட்களுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்த்தார். மேலும் அடுத்த வருடம் நடைபெறவுள்ள நாடாளூமன்ற  தேர்தலுக்கு மெகா கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் இறங்கி உள்ளார்.
அதற்கு முக்கியமான காரணம் தற்போதைய ஆளும் மத்திய அரசுடன் அவருக்கு உண்டான கசப்புணர்வே ஆகும்.
 
அதனால் எப்படியும் மோடி அரசை வீழ்த்தியே தீர வேண்டுமென கங்கணம் கட்டிக்கொண்டு இந்தியாவில் உள்ள கட்சித்தலைவர்களை சந்தித்து வருகிறார்.
 
இந்நிலையில் நேற்று சென்னைக்கு வந்த அவர் திமுக கட்சியின் தலைவர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.
 
அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த சந்திரபாபு நாயுடு கூறியதாவது:
 
காங்கிரஸ் உடன் கருத்து வேறுபாடு இருந்தாலும் நாட்டின் நலன் கருதிதான் இந்த கூட்டணியை உருவாக்கி வருகிறோம்.
 
நம் நாட்டில் பல தகுதியான தலைவர்கள் உள்ளனர். மோடியை விட ஸ்டாலின் சிறந்த தலைவராக இருக்கிறார். தமிழக அரசானது  மத்திய அரசின் கட்டுப்பாட்டில்தான்  இயங்கி வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.