வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 28 ஆகஸ்ட் 2018 (18:09 IST)

தலைவரான ஸ்டாலினுக்கு ஆரத்தி : எங்கே போனது பகுத்தறிவு?

திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஸ்டாலினை வரவேற்க அவரது குடும்பத்தினர் ஆரத்தியுடன் காத்திருந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக வலம் வருகிறது.

 
இன்று நடைபெற்ற திமுக பொதுக்குழுவில் ஸ்டாலின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின் அவர் மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதியின் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்திவிட்டு கோபாலபுரம் சென்றார். 
 
அப்போது, அவரின் சகோதரி செல்வி ஆரத்தி தட்டுடன் அவரை வரவேற்க காத்திருந்தார். இந்த புகைப்படங்களை வெளியிட்டு, எங்கே போனது பகுத்தறிவு?, ஊருக்குதான் உபதேசமா? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
 
ஸ்டாலினின் துணைவியார் மற்றும் சகோதரி ஆகியோர் கடவுள் நம்பிக்கை உடையவர்கள். எனவே, அவர்களின் திருப்திக்காக அதை செய்துள்ளனர். தனக்கு நம்பிக்கை இல்லையென்றாலும், தனது துணைவியாருக்காக ஸ்டாலின் கோவிலுக்கும் சென்றுள்ளார். எனவே, இதில் தவறு எதுவும் இல்லை என திமுகவினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.