1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: சனி, 2 நவம்பர் 2019 (08:40 IST)

மக்களுக்கு மிகப்பெரிய ஆபத்து அதிமுக..ஸ்டாலின் குற்றச்சாட்டு

இன்று மக்களுக்கு மிகப்பெரிய ஆபத்தாக மாறி இருப்பது அதிமுக ஆட்சி தான் என திமுக தலைவர் முக ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

மத்திய அரசு புதிய கல்வி கொள்கையை அறிவித்திருந்த நிலையில், 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை பல அரசியல் தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் பாஜக மற்றும் அதிமுக குறித்து  திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது விமர்சனத்தை பதிவு செய்துள்ளார். அதில் ”தமிழக மக்களின் நலனை பாதிக்கும் எந்த திட்டத்தை பாஜக அரசு கொண்டு வருகிறதோ, அதை அதிமுக ஆதரிக்கிறது. அதிமுக ஆட்சிதான் தமிழக மக்களுக்கு பெரும் ஆபத்தாக மாறி இருக்கிறது என விமர்சித்துள்ளார்.

நீட் தேர்வு, ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு உள்ளிட்டவை அமல்படுத்தப்பட்டபோதும் திமுக எதிர்த்து வந்த நிலையில் “மக்களுக்கான நல திட்டங்களை திமுக எதிர்க்கிறது” என விமர்சனங்களும் எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.