18 வயது மேற்பட்டோருக்கான தடுப்பூசி திட்டம்: திருப்பூரில் முதல்வர் தொடங்கி வைக்கிறார்!
தமிழகத்தில் ஏற்கனவே 55 வயதுக்கு மேலானவர்களுக்கும் 45 வயதுக்கு மேலானவர்களுக்கும் தடுப்பூசி போடும் பணி விறுவிறுப்பாக நடந்து கொண்டு வருகிறது. இந்த நிலையில் இன்று முதல் 18 வயதுக்கு மேலானவர்களுக்கும் தடுப்பூசி போடும் பணி தொடங்கி வைக்கப் போகிறது என்பது குறிப்பிடத்தக்கது
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று திருப்பூரில் 18 வயதிற்கு மேலானவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். மேலும் அவர் சேலம் கோவை திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்ய போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் சேலம் இரும்பு ஆலை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் படுக்கை வசதியுடன் கூடிய புதிய மருத்துவமனையையும் அவர் பார்வையிட உள்ளார். இன்று முதல் 18 வயது மேலானவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட உள்ளதால் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.