வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 5 பிப்ரவரி 2019 (10:57 IST)

தாத்தா இல்லை, மாமா – கிராம சபைக் கூட்டத்தில் ஸ்டாலின் நகைச்சுவை !

திமுக தலைவர் ஸ்டாலின் தமிழகம் முழுவதும் திமுக சார்பில் நடத்தப்படும் கிராம சபைக் கூட்டங்களில் பங்கேற்று மக்களிம் குறைகளைக் கேட்டு வருகிறார்.

மக்களவைத் தேர்தலை ஒட்டி தமிழகம் முழுவதும் கிராமசபைக் கூட்டங்களை திமுக நடத்தி வருகிறது. இதில் திமுக தலைவர் ஸ்டாலின், கனிமொழி மற்றும் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுக முக்கியப்புள்ளிகள் கலந்து கொண்டு மக்களோடுக் கலந்துரையாடி வருகின்றனர்.

இது போன்றதொருக் கூட்டம் உசிலம்பட்டியில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட ஸ்டாலின் மக்களோடுக் கலந்துரையாடி அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார். அப்போது அங்கு வந்திருந்த சிறுமி ஒருவர் ஸ்டாலினைப் புகழ்ந்து பாடல் ஒன்றைப் பாடிவிட்டு ‘ஸ்டாலின் தாத்தா வணக்கம்’ எனக் கூறினார்.

அதைக் கேட்ட ஸ்டாலின் ‘ஸ்டாலின் தாத்தா அல்ல… ஸ்டாலின் மாமா’ என அந்த சிறுமிக்கு நல்கைச்சுவையாகப் பதிலளித்தார். இதனால் கூட்டத்தில் சிரிப்பலை எழுந்தது. அதையடுத்து ஸ்டாலின் அந்த சிறுமியின் பெயர் மற்றும் விவரங்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டார்.