திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 28 மார்ச் 2018 (16:57 IST)

எடப்பாடி பழனிச்சாமியா? வாழப்பாடி பழனிச்சாமியா? ஸ்டாலினின் இன்றைய உளறல்

திமுக தலைவர் கருணாநிதி எந்த அளவுக்கு பேச்சாற்றலில் வல்லவரோ அதற்கு நேர்மாறாக அவரது மகன் மு.க.ஸ்டாலின் உளறலில் மன்னனாக இருந்து வருகிறார். யானை வரும் முன்னே மணியோசை வரும் பின்னே மற்றும் பூனை மேல் மதில் போல ஆகியவை ஸ்டாலினின் உளறல்களுக்கு லேட்டஸ்ட் உதாரணங்கள்

ஸ்டாலினின் இந்த புதிய பழமொழிகள் கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைத்தளங்களில் டிரெண்ட்டிங்காக இருந்து வரும் நிலையில் இன்று அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது, இன்றைக்கு தமிழகத்தில் நடைபெற்று வரும் வாழப்பாடி பழனிச்சாமி தலைமையிலான பினாமி ஆட்சி என்று கூறிவிட்டு பின்னர் எடப்பாடி பழனிசாமி என்று திருத்தி கூறினார்.

ஸ்டாலின் இவ்வாறு மாற்றி கூறும்போது அருகில் இருந்த துரைமுருகன் சிரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படியே தினமும் ஒரு உளறலை ஸ்டாலின் கொட்டி கொண்டிருந்தால் நெட்டிசன்களுக்கும், மீம்ஸ் கிரியேட்டர்களுக்கும் நல்ல வேட்டை என்பது குறிப்பிடத்தக்கது.