வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 9 மார்ச் 2019 (13:24 IST)

’ஸ்டாலின் மிரண்டு அரண்டுபோய் உள்ளார் ’ : முதல்வர் பழனிசாமி

சேலம் மாவட்டத்தில் உள்ள ஒமலூரில்  அதிமுக கட்சியின் சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அமை முதல்வர் எடப்பாடி கலந்து கொண்டார்.
அப்போது கட்சி நிர்வாகிகளிடையே அவர் பேசியதாவது:
 
கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்கள் கவனமாக இருந்து ஒத்துழைப்பு நல்கவேண்டும்.சிறிதளவு விஷம் கலந்தாலும் பால் கெட்டு விடும். எனவே கட்சி தொண்டர்கள் கவனமாக இருக்கவேண்டும். கூட்டணி இறுதியான பின் அனைத்து நிர்வகிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளேன். ஆனால் அதிமுக கூட்டணியை உடைக்க எதிர்க்கட்சிகள் சதி செய்து வருகின்றனர். அதனால் நம் கூட்டணியினர்  முழு ஒத்துழைப்புடன் நல்கி வரும் தேர்தலை சந்திக்க வேண்டும்.
தேர்தல் அறிவித்தால் ஒருமாத அவகாசமே இருக்கும் வாக்குகளை சிந்தாம;ல் சிதறாமல் பெற வேண்டும். அதிமுக கூட்டணியை கண்டு ஸ்டாலின் மிரண்டு போயுள்ளார். அடுத்த தேர்தலிலும் இதே கூட்டணி தொடரும். இன்னு சில கட்சிகள் நம்முடன் இணயவுள்ளனர்.
 
இது ஒருபுறம் இருக்க நாளை மாலைக்குள் அதிமுக கூட்டணியின் குறித்து முடிவுகள் தெரிந்துவிடும் என்று அதிமுக அமைச்சர் தங்கமணி தெரிவித்திருக்கிறார்.