வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 26 மே 2021 (13:02 IST)

கொரோனாவால் இறந்த பத்திரிக்கையாளர்களுக்கு 10 லட்ச ரூபாய்.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

கோப்புப் படம்

கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் பத்திரிக்கையாளர்களுக்கு 10 லட்ச ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.

கொரோனா காலத்தில் பணிபுரியும் பத்திரிக்கையாளர்களையும் தமிழக அரசு முன்களப் பணியாளர்களாக அறிவித்துள்ளது. அதையடுத்து இப்போது கொரோனா பாதிக்கப்பட்டு இறக்கும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிக்கைகளில் பணியாற்றும் பத்திரிக்கையாளர்கள் இறந்தால் அவர்களின் குடும்பத்துக்கு 10 லட்ச ரூபாய் நிதி வழங்கப்படும் என ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஏற்கனவே இந்த தொகை 5 லட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.