வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : ஞாயிறு, 10 செப்டம்பர் 2017 (10:12 IST)

செயலில் இறங்கிய செயல் தலைவர்: ஆட்சியை கவிழ்க்க அடுத்தடுத்த வியூகம்!!

திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஏம்எல்ஏ-க்கள் இன்று ஆளுநரை சந்திக்கவுள்ள நிலையில், நாளை சபாநாயகர் தனபாலை சந்திக்க உள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.


 
 
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகு ஆளும் கட்சியான அதிமுக பிளவு பட்டு சிதரி கிடக்கிறது. முன்னர் மூன்று அணி மோதலாக இருந்தது தற்போது இரண்டு அணி தீவிர மோதலாக மாறியுள்ளது.
 
ஓபிஎஸ்-ஈபிஎஸ் அணிகள் இணைந்த பிறகு, டிடிவி தினகரன் தலைமையிலான அணியினர் பரபரப்பு காட்ட தொடங்கினர். முதலமைச்சர் பழனிச்சாமியை பதவியில் இருந்து தூக்க வேண்டும் என்று தீவிரம் காட்டி வருகின்றனர். 
 
இது தொடர்பாக ஆளுநரிடமும் முறையிட்டுள்ளனர். ஆளுநரின் முடிவை எதிர்நோக்கி டிடிவி ஆதரவு எம்எல்ஏ-க்கள் அமைதி காத்து வருகின்றனர்.
 
இதற்கிடையே, தமிழகத்தை ஆளும் அதிமுக பெரும்பான்மை இழந்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. 
 
திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளுநரை சந்தித்து, அரசை பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுமாறு வலியுறுத்தினர். ஆளுநர் நடவடிக்கை எடுக்கத் தவறினால், குடியரசுத் தலைவரை சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர். 
 
இன்று மாலை ஸ்டாலின் தலைமையிலான எம்எல்ஏ-க்கள் ஆளுநரை மீண்டும் சந்தித்து முறையிட உள்ளனர். மேலும், நாளை சபாநாயகர் தனபாலை சந்திக்கவும் திமுகவினர் திட்டமிட்டுள்ளனர். 
 
அந்த சந்திப்பில் சட்டமன்றத்தை உடனடியாக கூட்டவும், நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று மனு அளிக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.