வேட்பாளர் தேர்வு… ஸ்டாலினின் புதிய அனுகுமுறை!
தேர்தலில் நிற்க இந்த முறை திமுகவில் புதிய அனுகுமுறைகளை செயல்படுத்த உள்ளதாக சொல்லப்படுகிறது.
திமுக கடந்த 10 ஆண்டுகளாக ஆளும்கட்சியாக அரியணை ஏற முடியாமல் போராடி வருகிறது. இதையடுத்து இந்த தேர்தலில் எப்படியும் வெற்றி பெற வேண்டும் எனக் கடுமையாக திட்டங்களை வகுத்து செயல்பட்டு வருகிறது. திமுகவுக்காக ஐபேக்கும் தேர்தல் உத்திகளை செய்து வருகிறது.
இந்நிலையில் இந்த முறை வேட்பாளர்களின் தேர்வுமுறையில் புதிய அனுகுமுறைகளை ஸ்டாலின் கையாள வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. வழக்கமாக திமுகவில் வாரிசு அரசியல் அதிகமாக உள்ளது என விமர்சனங்களால் இந்த முறை வாரிசுகளுக்கு சீட் கொடுக்கப்பட மாட்டாது என சொல்லப்படுகிறது. அது போலவே எக்காரணம் கொண்டும் கட்சி மாறாதவர்களாகக் கொள்கையில் பிடிப்பு உள்ளவர்களாக இருக்கவேண்டும் எனவும் எதிர்பார்க்கிறதாம். அதே போல எந்த வழக்குப் பின்னணியும் இல்லாதவர்களாக இருக்க வேண்டும் என்றும் நிபந்தனை உள்ளதாக சொல்லப்படுகிறது.