ஜே.கே.ரித்தீஷ் மறைவுக்கு ஸ்டாலின், விஷால் இரங்கல்

Last Modified சனி, 13 ஏப்ரல் 2019 (19:03 IST)
நடிகரும் முன்னாள் எம்பியுமான ஜேகே ரித்தீஷ் இன்று மாரடைப்பால் காலமானார். 46 வயதில் முதல் மாரடைப்பிலேயே அவரது உயிர் பிரிந்தது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
ரித்தீஷ் மறைவு குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கல் அறிக்கையில், 'ஜே.கே.ரித்தீஷ் மறைவுச் செய்தி கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். நாடாளுமன்றத்தில் ராமநாதபுரம் தொகுதி மக்களின் பிரச்சனைகளை எடுத்துரைத்து வாதிட்டவர் ஜே.கே.ரித்தீஷ் என்று கூறினார்.

நடிகர் விஷால் தனது டுவிட்டரில், 'ரித்தீஷின் மறைவு என்னை அதிர்ச்சிக்குள்ளாகியது. நடிகர் சங்க தேர்தலின்போதுதான் அவரை முழுமையாக புரிந்து கொண்டேன். அவருடைய மனைவிக்கும் குழந்தைகளுக்கும் எனது இரங்கல்கள். அவர்களுக்கு இந்த துயரத்தை தாங்கக்கூடிய வலிமையை இறைவன் கொடுக்க வேண்டுகிறேன்' என்று கூறியுள்ளார்.
ரித்தீஷ் நடித்த கடைசி படமான 'எல்.கே.ஜி' படத்தில் நடித்த ஆர்ஜே பாலாஜி கூறியபோது, 'ரித்தீஷ் ஒரு சகோதரனை போல் பழகினார். அவருடைய மறைவை என்னால் நம்பவே முடியவில்லை. எளியவர்களுக்கு பல உதவி செய்தவர். பலரின் முன்னேற்றத்திற்கு காரணமாக இருந்தவர் என்று கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :