வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Modified: வெள்ளி, 30 ஜனவரி 2015 (07:51 IST)

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை - திருமாவளவன்

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு அளிக்கப்போவதில்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்  திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் தங்களை ஆதரிக்கும்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கேட்டுக்கொண்டுடிருந்தது.
 
இது குறித்து கட்சி நிர்வாகிகளிடம் கலந்து ஆலோசித்தோம். இந்த இடைத்தேர்தலில் நாங்கள் யாரையும் ஆதரிப்பதில்லை என்ற முடிவை எடுத்துள்ளோம்.
 
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் மட்டுமல்ல, எப்போது இடைத்தேர்தல் நடந்தாலும் ஆளுங்கட்சி தான் வெற்றி பெறும் என்ற நிலை உள்ளது. ஆளுங்கட்சியை எதிர்த்து போட்டியிட மற்ற கட்சிகள் தயக்கம் காட்டுகின்றன. தற்போது நடைபெறும் ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலிலும் அதே நிலை தான் நீடிக்கிறது.
 
அமைச்சர்கள் முகாமிட்டு தேர்தல் பணியாற்றுவதாக கூறி தேர்தல் ஆணைய வழிமுறைகளுக்கு எதிராக எல்லா நடவடிக்கைகளிலும் ஈடுபடுகிறார்கள். இது ஜனநாயகத்துக்கு ஆரோக்கியமில்லை. இடைத்தேர்தலுக்கு புதிய வரையறைகள் உருவாக்க வேண்டும்.
 
அமைச்சர்கள் இடைத்தேர்தலில் பிரசாரம் செய்ய கூடாது என்ற சட்ட திருத்தம் கொண்டு வரவேண்டும். அந்த அடிப்படையில் ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பங்கேற்கவில்லை.
 
எந்த கட்சிக்கும் ஆதரவு கொடுக்க மாட்டோம். இது இடைத்தேர்தலுக்கான எங்கள் முடிவு. பொதுத் தேர்தலுக்கு இது பொருந்தாது. எங்களின் நிலைப்பாட்டால் திமுக வுடான உறவில் எந்த பாதிப்பும் இருக்காது“ என்று திருமாவளவன் கூறினார்.