விஜயகாந்திற்கு பேச்சு பயிற்சி? - தொண்டர்கள் அதிர்ச்சி


Murugan| Last Updated: வெள்ளி, 19 மே 2017 (16:02 IST)
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்திற்கு பேசும் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக வெளிவந்த தகவல், தேமுதிக தொண்டர்களை அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

 

 
திரைப்படத்தில் தனது கணீர் குரலில் வசனங்கள் பேசி ரசிகர்களை கவர்ந்தவர் விஜயகாந்த். கேப்டன் பிரபாகரன், எழை ஜாதி, ரமணா உள்ளிட்ட படங்களில் இவர் பேசிய அரசியல் வசனங்கள் பிரபலமானவை.
 
அரசியலுக்கு வந்த புதிதில் கூட தனது தனிப்பட்ட பேச்சால் தொண்டர்களை அவர் கவர்ந்து வந்தார். ஆனால், கடந்த சில வருடங்களாகவே உடல்நலக்குறைவு காரணமாக அவரால் தொடர்ச்சியாகவும், கோர்வையாகவும் பேச முடியவில்லை. மேலும், தனது தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடம் அவர் அடிக்கடி கோபப்படுவதும் அவர் மீது இருக்கும் இமேஜை அடித்து நொறுக்கியது.
 
உடல் நலக்குறைவு காரணமாக, அரசியல் வாழ்க்கையில் அவரால் திறம்பட செயல்பட முடியவில்லை. மேலும், சமீபகாலமாக தனது நண்பர்களை கூட நினைவில் வைத்துக்கொள்ளமுடியாத அளவிற்கு அவரின் நினைவுத்திறன் மங்கிப்போனது. ஆனால், மருத்துவர்களின் தொடர் சிகிச்சைக்கு பின் அவர் தற்போது ஓரளவிற்கு குணமாகி விட்டார். வீட்டிலேயே சிறு சிறு உடற் பயிற்சிகளை செய்து வருகிறார் எனக் கூறப்படுகிறது. 
 
ஆனால், பேசுவதில் மட்டும் இன்னும் அவருக்கு சிரமம் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே, அதை சரிசெய்ய ஸ்பீச் தெரபி எனப்படும் பேச்சு பயிற்சியை மருத்துவர்கள் அவருக்கு அளித்து வருகின்றனர் என செய்திகள் வெளிவந்துள்ளது. எல்லாம் சரியாக நடந்தால், உடல் பிரச்சனையிலிருந்து மீண்டு, வருகிற உள்ளாட்சி தேர்தலின் போது, அவர் பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
தனது பேச்சு திறன் மூலமாகவே, ரசிகர்கள் மற்றும் பொதுமக்களை கவர்ந்த விஜயகாந்திற்கு, பேச்சு பயிற்சி அளிக்கப்பட்டு வருவது தேதிமுக தொண்டர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :