1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 3 நவம்பர் 2024 (07:31 IST)

சொந்த ஊரில் இருந்து சென்னை திரும்பும் பொதுமக்கள்: 2 முன்பதிவில்லா ரயில் அறிவிப்பு..!

Train
தீபாவளி கொண்டாட சொந்த ஊர் சென்ற பொதுமக்கள் மீண்டும் சென்னை திரும்ப வசதியாக இரண்டு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

நான்கு நாள் விடுமுறை என்பதால் தீபாவளி பண்டிகையை கொண்டாட சென்னையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர் சேர்ந்த நிலையில், தற்போது தீபாவளி பண்டிகை முடித்துவிட்டு சென்னை திரும்ப பொதுமக்கள் தயாராகி வருகின்றனர். இன்று காலை முதல் இரவு வரை சொந்த ஊரிலிருந்து புறப்படும் பொதுமக்கள் நாளை காலை சென்னை வந்தடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் இருந்து 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சொந்த ஊர் சென்றுள்ளனர். தீபாவளி தொடர் விடுமுறை முடிந்து சென்னை திரும்புவதற்கு வசதியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, நவம்பர் 3ஆம் தேதி மதுரை மற்றும் திருச்சியில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. இன்று மாலை 7:15 மணிக்கு மதுரையில் இருந்தும், இரவு 10:50 மணிக்கு திருச்சியில் இருந்தும் முன்பதிவில்லா  சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாகவும், இந்த ரயிலை சென்னை திரும்பும் பயணிகள் பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது சிறப்பு ரயில்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Edited by Siva