திமுகவுக்கு வாய்ப்பளித்த மக்களுக்கு சிறப்பு பரிசு - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சியான திமுகவுக்கு வாய்ப்பளித்த மக்களுக்கு சிறப்பு பரிசாக அரசு சொத்து வரியை உயர்த்தியுள்ளது என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மா நகராட்சி மற்றும் நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் சொத்து வரி விகிதங்களை 25% முதல் 150 வரை உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதனால் 600 சதுர அடிக்கும் குறைவான பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கு 25 சதவீதமும், 601 முதல் 1200 சதுர அடி வரை பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கு 50 சதவீதமும், 1201 முதல் 1800 சதுர அடை வரை பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 75 சதவீதமும் 1800 சதுர அடிக்கும் அதிகமான பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கு 100 சதவீதமும் சொத்து வரி உயர்வு செய்யப்படவுள்ளது.
மேலும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் மா நகராட்சிகள் நகராட்சி, பேரூராட்சிகளில் சொத்து வரி விகிதங்களை மாற்றி அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளதாவது:
சொத்து வரி உயர்வு என்பது வெறும் டிரைலர் தான் இனிவரும் காலங்களில் மக்களுக்கு பல பம்பர் பரிசுகள் காத்திருக்கின்றன எனத் தெரிவித்துள்ளார்.