செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வியாழன், 3 ஜூன் 2021 (15:51 IST)

தென்மேற்குப் பருவமழை தொடங்கியது -வானிலை மையம் தகவல்

இது கோடை காலமாக இருந்தாலும் கேரளாவில் தென்மேற்குப் பருவ மழை தொடங்கியுள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியத்துணைக்கண்டத்தில் அதிகளவு பயனளிக்கக் கூடியது தென்மேற்குப் பருவமழை. இது தற்போது கேரளாவில் தொடங்கியுள்ளது.

மேலும், கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தொடங்கிவிட்டதாக இந்திய வானிலை மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தென்மேற்குப் பருவமழை வரும் செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும் என வானிலை வானிலை மையம் கூறியுள்ளது.

மேலும் வெப்பச்சலனம் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக  10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், மதுரை, தேனி, திருச்சி, நாமக்கல் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இடை மின்னலுடன் கன மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.