திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 4 ஜூலை 2022 (08:13 IST)

ரயில் பயணிகளே..! சென்னை மின்சார ரயில் நேரம் மாற்றம்! – தெற்கு ரயில்வே!

Chennai Train
சென்னை மின்சார ரயில் பாதையில் பணிகள் நடைபெறுவதால் ரயில்கள் செயல்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

சென்னையில் தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை இடையே இரவு 10.25 மணி, 11.25 மணி மற்றும் 11.45 மணிக்கு செல்லும் ரயில்களும், அதேபோல் மறுமார்க்கமாக சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் இடையே இரவு 11.20 மணி, 11.40 மணி மற்றும் 11.59 மணிக்கு செல்லும் ரயில்களும் பராமரிப்பு பணி காரணமாக நாளை (05.07.2022) முதல் 8ம் தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.