தென் மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மழை!!
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக தகவல்.
மழைப்பருவக்காலம் முடிந்து விட்ட நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக தென் தமிழக மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், பிற இடங்களைப் பொறுத்தவரை வறண்ட வானிலையே நிலவும் எனவும் சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.