வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : திங்கள், 25 செப்டம்பர் 2023 (18:13 IST)

கூட்டணி முறிவு பற்றி பாஜக என்ன முடிவு? கரு. நாகராஜன் தகவல்

வரும் பாராளுமன்றத் தேர்தலில்  அதிமுக- பாஜக இடையே  கூட்டணி இல்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டியை தலைப்புச் செய்தியாக அச்சிட்டதால் நமது அம்மா நாளிதழின் நிர்வாக இயக்குனர் முத்துக்குமார் அப்பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.

பாஜக கூட்டணியைவிட்டு வெளியேற விரும்பாத முன்னாள அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் உத்தரவின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், இன்று சென்னை ராயப்பேட்டையில்  உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அப்போது வந்த பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதா சிலையைப் பார்த்து உருகி நின்றார்.

இக்கூட்டத்தில் பெரும்பாலான மா.செக்கள் பாஜகவுடன் ஏற்பட்ட கசப்புணர்வு காரணமாக அக்கட்சியுடன் கூட்டணி வேண்டாம் என்று கூறியதாக தெரிகிறது.

இத நிலையில்,  பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் என்று கூறிதால் அதிமுக தலைமை தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது.

இதை அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகிறது.

இதுகுறித்து பாஜக மாநில துணை தலைவர் கரு.நாகராஜன்,’’ கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவதை இழப்பு என சொல்லிட்டு சோர்வாகவே, இயங்காமலோ எங்களால் இருக்க முடியாது. இருப்பினும் இதுபற்றி கருத்து கூறமுடியாது. விரைவில் தேசிய தலைமை கருத்துச் சொல்லும்….அதுவரை அமைதியாக இருப்போம்’’ என்று தெரிவித்துள்ளார்.