திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 29 நவம்பர் 2017 (16:37 IST)

புளூ வேலின் அடுத்த வெர்ஷன்; தாயை கொடுமைப்படுத்தும் மகன்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே புளூ வேல் விளையாட்டால் தாயை மகன் அடித்து துன்புறுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியைச் சேர்ந்த செந்தில் என்பவர் பட்டப்படிப்பை முடித்துள்ளார். சில நாட்களாகவே செந்தில் தனிமையாக காணப்பட்டுள்ளார். நாட்கள் கடக்க தனது தாயை அடித்து துன்புறுத்தியுள்ளார்.
 
செந்திலின் கொடுமையைத் தாங்க முடியாமல் அவரது தாய் மகன் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் செந்திலிடம் விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில் செந்தில் கடந்த சில நாட்களாக புளூ வேல் விளையாடி வருவதாகவும் அதில் கொடுக்கப்பட்ட கட்டளைகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருவதாகவும் கூறியுள்ளார்.
 
தாயை அடிக்க சொல்லி கட்டளை வந்ததால் தாயை அடித்தேன் என்றும் கூறியுள்ளார். இதையடுத்து அவருக்கு ஆலோசனை வழங்க முடிவு செய்தனர். 
 
ஆகஸ்டு மாதம் முதல் இந்தியாவில் பல்வேறு இடங்களில் புளூ வேல் விளையாடி சிறுவர்கள் முதல் இளைஞர்கள் பலரும் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் நாட்டையே  அதிரவைத்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் வினோதமான முறையில் அடுத்தவரை துன்புறுத்தும் வகையில் விளையாட்டு தொடங்கியுள்ளது.