ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வியாழன், 5 ஜனவரி 2017 (18:42 IST)

2வது திருமணம் செய்துவைக்க மறுத்த தந்தையை அடித்துக் கொன்ற மகன்

மயிலாடுதுறை அருகே தனக்கு இரண்டாவது திருமணம் செய்ய வேண்டும் என வற்புறுத்திய மகனின் விருப்பத்தை நிறைவேற்றாததால் தனது தந்தையையே கொலை செய்துள்ளார்.


 

மயிலாடுதுறை திருஇந்தளூர் செட்டித்தெருவை சேர்ந்த பார்த்தசாரதி என்பவர் வாடகை சைக்கிள் கடை நடத்தி வந்துள்ளார். இவரது மகன் தமிழ்வாணன் எலக்ட்ரீஷியனாக பணியாற்றி வருகிறார். தமிழ்வாணன் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் எனக் கூறப்படுகிறது.

இதற்கிடையில், மதிவாணனின் மனைவி கார்த்திகா கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் விவாகரத்து பெற்று கொண்டு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். அதன் பின்னர் தமிழ்வாணன் தினந்தோறும் குடித்துவிட்டு வந்துள்ளார். மேலும், தனது தந்தை பார்த்தசாரதியிடம், தனக்கு 2வது திருமணம் செய்து வைக்கும்படி கேட்டு தொந்தரவு செய்துள்ளார்.

இந்நிலையில், இது குறித்து இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த தமிழ்வாணன் அருகில் கிடந்த கட்டையால் பார்த்தசாரதியை சரமாரியாக தாக்கியுள்ளார்.

அதில் சம்பவ இடத்திலேயே பார்த்தசாரதி பரிதாபமாக இறந்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்து தமிழ்வாணனை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.