1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: திங்கள், 18 செப்டம்பர் 2017 (13:21 IST)

மாமியாரை கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்த மருமகன்...

மருமகனே தனது நண்பர்களுடன் சேர்ந்து தனது மாமியாரை பாலியல் பலாத்காரம் செய்து அவரை கொலை செய்த விவகாரம் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
மதுரை எஸ்.எஸ்.காலனியைச் சேர்ந்தவர் ஜோதி. இவரை கடந்த சில நாட்களாக காணவில்லை. எனவே, அவரின் உறவினர்கள் போலீசாரிடம் புகார் அளித்தனர். அதையடுத்து, விசாரணையில் இறங்கிய போலீசாருக்கு, ஜோதியின் மருமகன் செல்வின் மீது சந்தேகம் எழுந்தது.
 
இதையடுத்து, அவரிடம் போலீசார் விசாரணை செய்த போது, தனது நண்பர்களோடு சேர்ந்து தனது மாமியாரை பாலியல் பலாத்காரம் செய்ததோடு, அவரை கொன்று, புல்லூத்து பாய்ஸ் டவுன் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் புதைத்து விட்டதாக அவர் வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து, அவரையும் அவரது நண்பர்களான அழகரடி அருண் பொன்மேனி, முகமது ஷெரிப் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். 
 
தற்போது, தாசில்தார் முன்னிலையில் ஜோதியின் உடலை தோண்டி எடுக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். மருமகனே தனது மாமியரை நண்பர்களோடு சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து அவரை கொலை செய்த விவகாரம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.