திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Modified: சனி, 20 மார்ச் 2021 (07:00 IST)

பராமரிப்பு பணிகள் எதிரொலி: குருவாயூர், நெல்லை, செங்கோட்டை ரெயில்கள் ரத்து

பராமரிப்பு பணிகள் எதிரொலி: குருவாயூர், நெல்லை, செங்கோட்டை ரெயில்கள் ரத்து
திருமங்கலம் மற்றும் துலுக்கப்பட்டி பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் என்று சில ரயில்கள் பகுதியாகவும் முழுவதுமாகவும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது
 
* சென்னை எழும்பூர்-நாகர்கோவில் (வண்டி எண்: 06063) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் வருகிற 25-ந்தேதியும், நாகர்கோவில்-எழும்பூர் (06064) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் வருகிற 26-ந்தேதியும், தாம்பரம்-நாகர்கோவில் (06065) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் வருகிற 28, 29-ந்தேதிகளிலும், நாகர்கோவில்-தாம்பரம் (06066) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் வருகிற 29, 30-ந்தேதிகளிலும் முழுவதுமாக ரத்துசெய்யப்படுகிறது.
 
 
* அதேபோல், குருவாயூர்-எழும்பூர் (06128) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் வருகிற 20-ந்தேதி (இன்று) முதல் 29-ந்தேதி வரை நெல்லை-எழும்பூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக எழும்பூர்-குருவாயூர் (06127) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் வருகிற 21-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை எழும்பூர்-நெல்லை இடையே பகுதியாக ரத்துசெய்யப்படுகிறது.
 
* எழும்பூர்-நெல்லை (02631) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் வருகிற 25-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை மதுரை-நெல்லை இடையிலும், நெல்லை-எழும்பூர் (02632) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் வருகிற 26-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை நெல்லை-மதுரையிலும் பகுதியாக ரத்துசெய்யப்படுகிறது.
 
* எழும்பூர்-செங்கோட்டை (06181) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் வருகிற 25-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை மானாமதுரை-செங்கோட்டை இடையிலும், செங்கோட்டை-எழும்பூர் (06182) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் வருகிற 26-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை செங்கோட்டை-மானாமதுரை இடையிலும் பகுதியாக ரத்துசெய்யப்படுகிறது.
 
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.