1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 5 ஆகஸ்ட் 2021 (19:06 IST)

ஆகஸ்ட் 12ம் தேதி வரை ராமேஸ்வரம் கோவிலில் தரிசனம் செய்ய தடை!

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருவதையடுத்து கட்டுப்பாடுகளும் அதிகரித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கோவை மற்றும் ஈரோடு பகுதியில் புதிய கட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது என்பதை பார்த்தோம். சென்னை மாவட்ட நிர்வாகமும் ஒரு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது
 
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி ராமேஸ்வரத்தில் சுற்றுலா பயணிகளுக்கும் உள்ளூர் மக்களுக்கும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. இதன்படி இன்று முதல் ஆகஸ்ட் 12-ஆம் தேதி வரை ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாத சுவாமி கோவிலில் தரிசனம் செய்ய சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
அதுமட்டுமின்றி ராமேஸ்வரத்தில் உள்ள முக்கிய சுற்றுலா பகுதிகளான தனுஷ்கோடி, அரிச்சல்முனை ஆகிய பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது