1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 9 பிப்ரவரி 2024 (07:37 IST)

தமிழகத்தில் சில எக்ஸ்பிரஸ் ரயில்கள் புறப்படும் நேரத்தில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

Train
தமிழகத்தில் பிப்ரவரி 11 முதல் 21 வரை சில எக்ஸ்பிரஸ் ரயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது

நெல்லை மற்றும் மேலப்பாளையம் இடையே இருவழிப் பாதை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் 21ஆம் தேதிக்கு பிறகு மீண்டும் பழைய முறையில் ரயில்கள் இயக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றில் வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் கூறி இருப்பதாவது:

வாஞ்சி மணியாச்சியில் இருந்து காலை 11.05 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.06679) வரும் 1, 2, 5, 8, 9 ஆகிய தேதிகளில் 3 மணி நேரம் 15 நிமிடம் தாமதமாக மதியம் 2.20 மணிக்கு புறப்பட்டு திருச்செந்தூர் செல்லும்.

அதேபோல், கன்னியாகுமரியிலிருந்து மதியம் 2 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் (16862) வரும் 12-ந்தேதி ஒரு மணி நேரம் தாமதமாக மதியம் 3 மணிக்கு புறப்பட்டு எக்ஸ்பிரஸ் ரெயில் (16862) வரும் 12-ந்தேதி ஒரு மணி நேரம் தாமதமாக மதியம் 3 மணிக்கு புறப்பட்டு புதுச்சேரி செல்லும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Edited by Siva