வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 26 பிப்ரவரி 2019 (14:00 IST)

தி.மு.க கூட்டணி கட்சிகள் அதிமுகவுடன் பேச்சுவார்த்தை: புருடா விடுகிறாரா ஜெயகுமார்?

திமுக கூட்டணியில் உள்ள சில கட்சிகள் எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்துகின்றன என அமைச்சர் ஜெயகுமார் கூறியுள்ளார்.
 
மக்களவை தேர்தலுக்காக அதிமுக, பாஜகவிற்கு 5 தொகுதியும், பாமகவிற்கு 7 தொகுதியும் ஒதுக்கியுள்ளது. தேமுதிக முரண்டு பிடிப்பதால் அந்த கட்சியுடனான தொகுதி பங்கீடு இழுபறியில் உள்ளது. 
 
திமுக காங்கிரசுடன் கூட்டணியை உறுதி செய்து, புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் 9 தொகுதி என மொத்தம் 10 தொகுதிகளை வழங்கியுள்ளது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்கு மக்கள் தேசிய கட்சிக்கு தலா 1 தொகுதிகளை வழங்கியுள்ளது. 
 
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயகுமார், எங்களின் மெகா கூட்டணியை பார்த்து திமுக பயந்து போயுள்ளனர். திமுக கூட்டணியில் உள்ள சில கட்சிகள் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகின்றன. விரைவில் அதைப் பற்றின அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என கூறினார்.
 
இவர் உண்மையை சொல்லுகிறாரா, இல்லை போகுற போக்குல புரளிய கிளப்பிட்டு போனாரா என தெரியவில்லை. அரசியலில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம். ஆகவே அவர் கூறியது உண்மையா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.