1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Updated : செவ்வாய், 26 மார்ச் 2024 (14:56 IST)

15 வயதுக்கும் குறைவானவர்கள் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்த தடை: அதிரடி மசோதா..!

social media
சமூக வலைதளம் என்பது தற்போது இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்ட நிலையில் இந்த சமூக வலைதளங்களால் இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் சிலர் பாதிக்கப்படுவதாக கூறப்பட்டு வருகிறது. அந்த வகையில் 15 வயதிற்கும் குறைவானவர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை என்ற மசோதாவை அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் அமல்படுத்தியதை அடுத்து அந்த மாகாணத்தில் உள்ள 15 வயதுக்கு குறைவான சிறுவர்கள் இனி சமூக வலைதளங்களை பயன்படுத்த முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. 
 
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் 15 வயதுக்கு குறைவான குழந்தைகள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்க கோரிய மசோதாவிற் அம்மாகாண ஆளுனர்  ஒப்புதல் அளித்துள்ளார். ஆனால் அதே நேரத்தில் 15 வயதுடைய குழந்தைகள் பெற்றோரின் அனுமதியுடன் சமூக வலைதளங்களில் இயங்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இது போன்று அமெரிக்கா முழுவதும் விரைவில் மசோதாக்கள் நிறைவேற்றப்படும் என்று கூறப்படுகிறது. சிறுவயதிலேயே குழந்தைகள் சமூக வலைதளங்களில் பயன்படுத்துவதால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுவதாக உளவியல் நிபுணர்கள் கூறியதை அடுத்து இந்த மசோதா இயற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
 
Edited by Mahendran