புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 18 நவம்பர் 2021 (14:06 IST)

அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு 26 லட்சத்தை கோட்டைவிட்ட சினேகா!

அதிக வட்டி தருவதாக கூறியதால் 26 லட்சம் ரூபாய் முதலீடு செய்து மோசமடைந்ததை குறித்து சினேகா காவல் நிலையத்தில் புகார். 

 
தென்னிந்திய சினிமாவின் சிரிப்பழகி சினேகா கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான என்னவளே என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் பல வெற்றி படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து பிரபல நடிகையாக பேசப்பட்டார்.
 
இவர் நடிகர் பிரசன்னாவை காதலித்து 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். 2015ல் இவர்களுக்கு விஹான் என்ற மகன் பிறந்தார். பின்னர் குழந்தைக்காக சிறிது காலம் சினிமாவில் ஒதுங்கியிருந்த சினேகா பின்னர் மீண்டும் சினிமாவில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினார். அதையடுத்து கடந்த ஜனவரி 24 ஆம் தேதி சினேகாவுக்கு இரண்டாவதாக பெண் குழந்தை குழந்தை பிறந்தது.
இந்நிலையில் கவுரி சிமெண்ட் அண்ட் மினரல் என்ற நிறுவனத்தின் உரிமையாளர்கள் சந்தியா, சிவராஜ், கவுரி ஆகியோர் தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாக நம்பிக்கை தரும் விதத்தில் பேசி என்னிடம் 26 லட்சம் ரூபாய் மோசடி செய்துவிட்டதாக கானாத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 
 
25 லட்சம் ரூபாய் ஆன்லைன் மூலமாகவும், 1 லட்சம் ரூபாயை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள ஒரு வீட்டில் வைத்து வழங்கியதாகவும் தனது புகாரில் சினேகா குறிப்பிட்டுள்ளார். பண மோசடி தொடர்பாக சினேகாவின் புகார் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.