Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

லோகோவில் இருந்து பாம்பு நீக்கம்: ரஜினி அதிரடி உத்தரவு

Last Modified புதன், 31 ஜனவரி 2018 (22:55 IST)
ரஜினி மக்கள் மன்றத்தின் லோகோவான பாபா முத்திரையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தாமரை நீக்கப்பட்டது. தாமரை என்பது பாஜகவின் சின்னம் என்பதால், தனது கட்சி பாஜகவுக்கு ஆதரவான கட்சி என்ற முத்திரை விழுந்துவிட கூடாது என்பதற்காக தாமரையை நீக்க ரஜினி உத்தரவிட்டார்.

இந்த நிலையில் அதே லோகோவில் பாம்பு ஒன்று சுற்றியிருக்கும்படி இருந்ததையும் நீக்க இன்று ரஜினி உத்தரவிட்டுள்ளார். ஒரு குறிப்பிட்ட மதத்தினர்களுக்கு எதிராக இந்த பாம்பு இருப்பதாக ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் சிலர் கூறிய கருத்தை அடுத்து ரஜினியின் உத்தரவின்பேரில் இன்று பாம்பு நீக்கப்பட்டது. தற்போது பாம்புக்கு பதில் ஒரு வட்டம் மட்டுமே உள்ளது.

மேலும் தமிழகம் முழுவதும் ரஜினி மக்கள் மன்றத்தின் நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு வருவதாகவும், அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் தேர்வு செய்யப்பட்ட பின்னர் முறைப்படி அரசியல் கட்சி அறிவிக்கப்படும் என்றும் ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :