Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

குடிசை மாற்று வாரியம் கட்ட எதிர்ப்பு – பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த மாவட்ட ஆட்சியர்

karur
Last Modified புதன், 14 மார்ச் 2018 (19:37 IST)
கரூர் அருகே உள்ள காந்திகிராமம் பகுதியை அடுத்த நரிக்கட்டியூர் பகுதியில் சுமார் 222 குடியிருப்புகள் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மூலம், கட்டப்பட்டு அந்த வீடுகளை, தனித்தனி நபர்களாக, அரசு அதிகாரிகள், அலுவலர்கள் மட்டுமில்லாமல், பொதுமக்களும் சிறுக, சிறுக பணம் கொடுத்து வாங்கியுள்ளனர். கடந்த பல ஆண்டுகளாக வசித்து வரும் அவர்களுக்கு, அதே பகுதியில் வீட்டு வசதி வாரியமும் காலி மனைகளை விளையாட்டு திடலுக்கு ஒதுக்கிய நிலையில், அந்த இடத்தில் கரூர் மாவட்ட நிர்வாகம், துப்புரவு தொழிலாளர்களுக்கு குடிசை மாற்று வாரியம் வீடு கட்டித்தர 192 வீடுகளை ஒதுக்கிய நிலையில், அதற்கான வேலைகள் செய்ய, முழு முனைப்புடன் நிர்வாகம் மேற்கொண்டு வரும் நிலையில், அந்த பகுதி பொதுமக்கள் இன்றுடன் மூன்றாவது நாளாக, பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.இந்த நிலையில் இன்று ஆயுதப்படை போலீஸார் அங்கு குவிக்கப்பட்டதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சூழ்நிலையில் கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன், அதே பகுதிக்கு நேரிலேயே வந்து குடிசை மாற்று வாரியத்தின் மேப்பையும், அதற்கான முழு விபரத்தையும் ஆராய்ந்ததோடு, அந்த பகுதி மக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்றதோடு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தங்கள் குறைகளை கேட்க எப்போதும் நான் (கலெக்டர் அன்பழகன்)இருப்பேன் என்று வாக்குறுதியும் கொடுத்தார். மேலும் இதே வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வாசிகள், இதே பகுதியில், குடிசை மாற்று வாரியத்தினர் வீடுகள் கட்டினால், பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படுமென்றும் கூறினார்கள்.கரூர் சி.ஆனந்தகுமார்


இதில் மேலும் படிக்கவும் :