வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 1 அக்டோபர் 2023 (13:39 IST)

நழுவிய அதிமுக.. யாருடன் கூட்டணி? – பாஜக மேலிடத்துடன் அண்ணாமலை அவசர ஆலோசனை!

பாஜக கூட்டணியிலிருந்து விலகுவதாக அதிமுக அறிவித்துள்ள நிலையில் அடுத்தக்கட்ட செயல்பாடுகள் குறித்து விவாதிக்க பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை இன்று டெல்லி செல்கிறார்.



கடந்த 2019 முதலாக நீடித்து வந்த பாஜக – அதிமுக கூட்டணி சமீப காலத்தில் ஏற்பட்ட முரண்பாடுகளால் விரிசல் கண்டுள்ளது. மாநில பாஜகவின் செயல்பாடுகளால் அதிருப்தி அடைந்த அதிமுக கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது. இதனால் பாஜக கூட்டணியில் உள்ள பிற கட்சிகளுமே அதிமுகவுடன் இணைவதா? பாஜகவுடன் தொடர்வதா? என்பது குறித்து ஆலோசித்து வருவதாக தெரிகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் கூட்டணி அமைப்பது குறித்து பாஜக தலைமை முக்கிய ஆலோசனையில் இறங்கியுள்ளது. இதற்காக இன்று மாலை பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை டெல்லிக்கு புறப்பட உள்ளார். அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து அவர் சில தீர்மானங்களை பாஜக தலைமைக்கு முன்மொழிய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நாடாளுமன்ற தேர்தல் தமிழக பாஜகவிற்குமே அவசியமான ஒன்று என்பதால் என்ன மாதிரியான முடிவுகள் எடுக்கப்படும் என்பதில் எதிர்பார்ப்புகள் உள்ளன.

Edit by Prasanth.K