வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 30 ஜூன் 2021 (08:28 IST)

சுஷில் ஹரி பள்ளிக்கு அழைத்து செல்லப்பட்ட சிவசங்கர் பாபா! தொடங்கியது விசாரணை!

பாலியல் துன்புறுத்தல் குற்றத்துக்கு ஆளாகியுள்ள சிவசங்கர் பாபா சுஷில் ஹரி பள்ளிக்கு அழைத்து செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளார்.

சென்னை கேளம்பாக்கம் சுஷில் ஹரி என்ற சர்வதேச பள்ளியை நடத்தி வந்த சிவசங்கர் பாபா மீது பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்ததை அடுத்து நேற்று டெல்லியில் அவர் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டர். நேற்று சென்னை கொண்டு வரப்பட்ட சிவசங்கர் பாபாவை சிபிசிஐடி போலீசார் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். இதனையடுத்து பாலியல் புகாரில் கைதான சிவசங்கர் பாபாவை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனையடுத்து அவர் சிறையில் சற்றுமுன் சிறையில் அடைக்கப்பட்டார். 

இந்நிலையில் சிறையில் இருந்த சிவசங்கர் பாபாவுக்கு ஜூன் 18 ஆம் தேதி திடீர் உடல்நலக்குறைவு செங்கல்பட்டிலுள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் சிகிச்சையில் தேறியுள்ள அவர் ஜூன் 26 ஆம் தேதி புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.


இந்நிலையில் நேற்று அவர் சுஷில் ஹரி பள்ளிக்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டார். அப்போது அவரைக் கைதியாக பார்த்த பள்ளி ஆசிரியர்கள் குரல் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்ததாக சொல்லப்படுகிறது. கிட்டத்தட்ட 2 மணி நேரம் சிவசங்கர் பாபா அவரது அறை உள்ளிட்ட பல இடங்களில் வைத்து விசாரிக்கப்பட்டுள்ளார்.