ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: சனி, 17 ஆகஸ்ட் 2024 (12:39 IST)

எட்டாம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சித்தப்பா!

சிதம்பரம் அடுத்த பரங்கிப்பேட்டை அருகே புதுகுப்பம் பள்ளித் தெருவை சேர்ந்தவர் பிரகாஷ் இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர்.
 
மனைவி இறந்துவிட்ட நிலையில் எட்டாம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமி 14 வயது சிறுவன் ஆகிய இருவரும் தனது பாட்டி அரவணைப்பில் இருந்து வந்துள்ளனர், இந்நிலையில் சிறுமியின் சித்தப்பா ஆனந்தஜோதி 41 இவர் அவ்வபோது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக கூறப்படுகிறது, எட்டாம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமி தனது தந்தையிடம் தெரிவித்தும் அவர் அதனை கண்டு கொள்ளாமல் சென்றுள்ளார்.
 
தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்வதால் சிறுமி கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ளார், இந்நிலையில் சித்தப்பா தனது அண்ணன் மகளை தூக்கிக் கொண்டு செல்லும்போது சிறுமியின் அண்ணன் பார்த்துள்ளார்.
 
அப்போது அவர் கேட்டபோது ஒன்றும் இல்லை என்று அவரை சித்தப்பா ஆனந்த ஜோதி அனுப்பி வைத்துள்ளார்.
 
இதனை தொடர்ந்து சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை பற்றி பாட்டி மற்றும் அண்ணனிடம் தெரிவித்ததன் பெயரில் சிறுமியின் அண்ணன் சென்னையில் உள்ள உறவினர் ஜெயப்பிரதா என்பவருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
 
அதனை அடுத்து ஜெயப்பிரதா சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார், புகாரின் பேரில் மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததில் சிறுமியை ஆனந்த ஜோதி தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
 
மேலும் இதற்கு உடந்தையாக இருந்த சிறுமியின் தந்தை பிரகாஷ் ஆகிய இருவரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
 
மேலும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்வதற்கு உடந்தையாக இருந்த ரேவதி, பிரேமா, வனஜா, ஆகிய மூவரயும் போலிசார் தீவிர  காவல் நிலையம் விசாரணை நடத்தி வருகின்றனர்.