1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 24 மார்ச் 2023 (15:52 IST)

லண்டன் மருத்துவமனையில் பிரபல கர்நாடக இசை கலைஞர் பாம்பே ஜெயஸ்ரீ அனுமதி!

பிரபல கர்நாடக இசை கலைஞர் பாம்பே ஜெயஸ்ரீ லண்டன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. தமிழ் உள்பட பல மொழிகளில் ஏராளமான பாடலை பாடியவர் பாம்பே ஜெயஸ்ரீ என்பதும் குறிப்பாக மின்னலே திரைப்படத்தில் இடம்பெற்ற வசீகரா என்ற இவர் பாடிய பாடல் பயங்கர ஹிட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஏஆர் ரகுமான், இளையராஜா, ஹாரிஸ் ஜெயராஜ் உள்பட பல பிரபலங்களிடம் இவர் பாடியுள்ளார் என்பது தெரிந்ததே. 
 
இந்த நிலையில் லண்டனில் நடக்கும் இசை நிகழ்ச்சிக்காக சென்ற அவர் எதிர்பாராத விதமாக தவறு கீழே விழுந்ததாகவும் அப்போது அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் சுயநினைவு இழந்து லண்டனில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran