Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சிங்கம் 3 வெளியாகும் நாள்.. எங்கள் நாள் - தமிழ் ராக்கர்ஸ் டாட் காம் நக்கல்


Murugan| Last Modified சனி, 4 பிப்ரவரி 2017 (16:43 IST)
திருட்டுத்தனமாக திரைப்படங்களை திருடி, இணையத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ள தமிழ் ராக்கர்ஸ் டாட் காம் நிறுவனம், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவை சீண்டும் படி கருத்து தெரிவித்துள்ளது.

 

 
தமிழ் சினிமாவில் எந்த படம் வெளியானாலும், பெரும்பாலும், அது தமிழ் ராக்கரஸ் டாட் காம் இணையதளத்தில் வெளியாகிவிடும். தியேட்டருக்கு செல்லாமல், இணையத்தில் படம் பார்க்க விரும்பும் கும்பலுக்கு, இந்த இணையதளமே சரணாகதி. சில பெரிய படங்கள் கூட, தியேட்டரில் வெளியான அன்றே, இந்த இணையதளத்திற்கு வந்துவிடும். 
 
இந்நிலையில், நடிகர் சூர்யா நடித்து வருகிற 9ம் தேதி வெளியாகவுள்ள சிங்கம் 3 படத்தை, அன்றைக்கே தியேட்டரில் இருந்து நேரிடையாக ஒளிபரப்புவோம் என அந்த இணையதளம் அறிவித்துள்ளது. இதனால் கோபம் அடைந்த அப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா இன்று செய்தியாளர்களிடம் பேசும் போது,  தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் படங்களை வெளியிடுபவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் எனக்கூறி ஆவேசமடைந்த அவர் தகாத வார்த்தைகளால் திட்டினார்.
 
இந்நிலையில், இதுபற்றி தமிழ் ராக்கர்ஸ் டாட் காம் தன்னுடைய முகநூலில் “ நன்றாக பேசினீர்கள். குறித்துக் கொள்ளுங்கள்.. வருகிற 9ம் தேதி எங்களுடைய நாள்” என கிண்டலாக குறிப்பிட்டுள்ளனர். 


இதில் மேலும் படிக்கவும் :