செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 21 ஜூன் 2021 (13:18 IST)

சென்னையை மேலும் நவீனமாக்கும் சிங்கார சென்னை 2.0! – நவீன திட்டங்கள் என்னென்ன?

தமிழக சட்டமன்ற கூட்டத்தில் பல்வேறு திட்டங்களுக்கான அறிவிப்புகள் வெளியான நிலையில் சிங்கார சென்னை 2.0 திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் திமுக ஆட்சியமைத்த பின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதில் ஆளுனர் உரையில் ஆளுனர் பன்வாரிலால் புரோகித் பல்வேறு திட்டங்களை அறிவித்தார், அதில் சென்னை மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களையும் அறிவித்தார்.

சிங்கார சென்னை 2.0 என்னும் திட்டத்தின் கீழ் வெள்ள பாதிப்புகளை குறைக்க சென்னை பெருநகர வெள்ள நீர் மேலாண்மை குழு அமைக்கப்படும்.

சென்னை மெட்ரோ ரயில் திட்ட இரண்டாம் கட்ட பணிகள் விரைவாக நிறைவேற்றப்படும்
சென்னை – கன்னியாக்குமரி தொழில் பெருவழியில் புதிய தொழில் நிறுவனங்கள் கொண்டு வர நடவடிக்கை

சென்னை – பெங்களூர் தொழில் பெருவழியிலும் புதிய தொழில் நிறுவனங்கள் கொண்டு வர நடவடிக்கை

மதுரவாயல் – சென்னை துறைமுகம் வரையிலான உயர்மட்ட சாலை திட்டத்தை விரைவு படுத்த நடவடிக்கை ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளன.