திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Dinesh
Last Updated : திங்கள், 22 ஆகஸ்ட் 2016 (18:44 IST)

உங்களுக்கு ஞாபக மறதி இருக்கிறதா? – கண்டிப்பாக மருத்துவர் ரத்தனமாலா கூறுவதை கேளுங்கள் (வீடியோ)

உங்களுக்கு ஞாபக மறதி இருக்கிறதா? – கண்டிப்பாக மருத்துவர் ரத்தனமாலா கூறுவதை கேளுங்கள் (வீடியோ)

ரத்தனமாலா செந்தில்குமார், என்ற பெண் மருத்துவர், இந்தியாவை சேர்ந்தவர், இந்தியாவில், இளங்கலை பட்டம் பெற்றப் பின், அமெரிக்காவில் தன் முதுகலை படிப்பை முடித்து, 20 வருடங்களாக, அமெரிக்காவிலேயே பேச்சு பயிற்ச்சி மற்றும் நினைவாற்றல் மருத்துவத்தில் வல்லுநராக இருந்துவருகிறார். அவரிடம் வெப்துனியா சார்பாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பல உபயகரமான தகவல்களை கூறியுள்ளார்.  


 



அந்த கேள்விகளும்…  பதில்களும்...

கேள்வி - அறிவாற்றல் சிக்கிச்சை (cognitive therapy) என்றால் என்ன?

பதில் - பல காரணங்களால் மூளை பாதிப்புக்குள்ளாவதை சரி செய்வது, அறிவாற்றல் சிக்கிச்சை என்று சொல்வார்கள். ஞாபக மறதியின் ஆரம்ப நிலை என்பது, பொருட்களை ஒரு இடத்தில், வைத்துவிட்டு மறு இடத்தில் தேடுவது. பிறகு, அது மெல்ல வளர்ந்து, எங்கே இருக்கின்றோம் என்ன செய்கின்றோம் என்பதையும் மறந்திடுவார்கள். மேலும், அவர்கள் உணவருந்தியதை கூட மறக்க நேரிடலாம். முக்கியமாக மூளைக்கு இரத்த ஓட்டம் குறையும் போது, மூளையில் உள்ள திசுக்கள் பாதிப்புக்குள்ளாவதால் இது போன்று ஞாபக மறதி ஏற்படுகிறது.


கேள்வி - மறதியின் அறிகுறிகள் என்ன?

பதில் - ஞாபக மறதி எதில் நடக்கிறது என்று முதல் பரிசோதிப்போம். ஞாபக மறதி இடைவெளியில் நடக்கிறதா, அல்லது காலத்தினால் நடக்கிறதா என்பதை கண்டறிவோம். இடைவெளி ஞாபக மறதி ஏற்படுகிறது என்றால், அவர்கள் வந்த பாதையை மறந்திவிட்டு, இடது புறம் செல்ல வேண்டுமா, அல்லது வலது புறம் செல்ல வேண்டுமா என்று குழம்புவார்கள். காலத்தினால்  ஞாபக மறதி ஏற்படுகிறது என்றால், அவர்கள் தேதி கிழமைகளை மறந்திடுவார்கள். இது போன்று பல விதமான பரிசோதனைகள் இருக்கிறது. பரிசோதனையில், நோயாளிகளின் நினைவாற்றலுக்கேற்ப சிகிச்சை அளிக்கப்படும்.

கேள்வி - இந்த வியாதியை எப்படி குணப்படுத்துவது?

பதில் - நோயாளியின் நோயின் பாதிப்பை பொருத்து, மருந்துகள் மூலமாகவும், பயிற்சிகள் மூலமாகவும் வியாதியை குணப்படுத்த முடியும். மேலும், நோயாளியின் குடும்பத்தினரும், அவர்களிடம், நினைவாற்றலை பெறுக்கும் விதமாக கேள்விகளை எழுப்ப வேண்டும். நோயாளிகளுக்கு நாம் கொடுக்கும் தன்னம்பிக்கை தான் அவர்கள் சீக்கிரம் நோயில் இருந்து குணமடைய செய்யும்.


கேள்வி - ஞாபக மறதி ஏன் வருகிறது?

பதில் - சிலருக்கு பிறவியிலேயே வருகிறது, சிலருக்கு விபத்தால் மறதி வருகிறது, ஒரு சிலருக்கு பயத்தால் வருகிறது, ஒரு சிலருக்கு மன அழுத்தத்தால் வருகிறது. ஒரு சிலருக்கு மூளைக்கு செல்லும் இரத்த ஓட்ட குறைவினால் ஞாபக மறதி வருகிறது.


கேள்வி - ஞாபக மறதியை போக்க எது போன்ற உணவை எடுத்து கொள்ளலாம்?

பதில் - புரத சத்துள்ள உணவுகளை அதிகம் எடுத்து கொள்ளலாம். சோயா, முட்டை போன்றவற்றில் அதிகமாக புரத சத்துள்ளது. அதுபோன்று புரதச்சத்துள்ள உணவுகளை அதிகமாக உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். புரதச்சத்தை அதிகமாக உட்கொண்டால் மூளையில் உள்ள திசுக்கள் சுருங்குவதை தடுக்க முடியும்.


கேள்வி - ஞாபக மறதியை போக்க எது போன்ற விளையாட்டுகளை விளையாடலாம்?

பதில் - சுடோகு, குறுக்கு வார்த்தை புதிர் போன்ற விளையாட்டுகளை விளையாடலாம். மேலும், நிறத்தை கண்டறிவது, வார்தைகளை கண்டறிவது, எண்களை கண்டறிவது போன்ற விளையாட்டுகளை விளையாடலாம். இது போன்ற விளையாட்டுகளை விளையாடுவதால் கவனம் அதிகரிக்கும், நினைவாற்றல் பெருகும்.


கேள்வி - ஞாபக மறதி முழுவதுமாக குணமாக வாய்ப்பிருக்கிறதா?

பதில் - நோயின் பாதிப்பை பொருத்தும், நோயாளிக்கு வழங்கப்படும் மருத்துவம் பொருத்தும், நோயாளியை உறவினர்கள் அணுகும் விதத்தையும் பொருத்தும் முழுவதும் குணமாக வாய்ப்பிருக்கிறது. மூளையில் உள்ள திசுக்கள் அதிக பாதிப்புக்குள்ளானால், ஞாபக மறதி திரும்ப வாய்ப்பில்லை, மூளையில் உள்ள திசுக்களின் பாதிப்பு குறைவாக இருந்தால், நினைவுகள் திரும்ப வாய்ப்புள்ளது. மூளைக்கு இரத்த ஓட்டம் குறையும் போது, மூளையில் உள்ள திசுக்கள் பாதிப்புக்குள்ளாவதால் இது போன்று ஞாபக மறதி வருகிறது. தொடர் பயிற்சியின் மூலம் அவர்களை குணமாக்கிவிடலாம். சில நோயாளிகளுக்கு நினைவு திரும்பாது என்ற நிலையில், அவர்கள் அதை ஏற்று கொண்டு, குறிப்புகள் வைத்தும், அலாரம் வைத்தும், அறிவிப்பொலி வைத்தும், தங்கள் அன்றாட வாழ்கையை அவர்கள் வாழ முடியும்.

மருத்துவரின் பேட்டி உங்கள் பார்வைக்கு...