வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: செவ்வாய், 6 டிசம்பர் 2016 (09:55 IST)

ஜெயலலிதா - எம்.ஜி.ஆர் - பல ஒற்றுமைகள்

உடல்நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கும், மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருக்கும் ஏராளமான ஒற்றுமைகள் உள்ளன.


 

 
1984ம் ஆண்டு அக்டோபர் மாதம், எம்.ஜி.ஆர் முதல் அமைச்சராக இருந்த போது, உடல் நலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
 
முதல்வர் ஜெயலலிதாவும் முதல் அமைச்சராக இருந்த போதுதான், உடல் நலக்குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் மாதம், சென்னை அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டார்.
 
முக்கியமாக அப்பல்லோவில் எம்.ஜி.ஆர் அனுமதிக்கப்பட்டிருந்த அறை எண் 2008-லியேயே முதல்வர் ஜெயலலிதாவும் அனுமதிக்கப்பட்டார்.
 
சிகிச்சை பலனின்றி எம்.ஜி.ஆர் மரணம் அடைந்த பிறகு, அவரது உடல் சென்னை ராஜாஜி அரங்கில், பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. தற்போது முதல்வர் ஜெயலலிதாவின் உடலும் அங்கேயே வைக்கப்பட்டுள்ளது.
 
எம்.ஜி.ஆர் போலவே கோடிக்கணக்கான அதிமுக தொண்டர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் ஜெயலலிதா. 
 
எம்.ஜி.ஆரின் உடல் சென்னை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டது. தற்போது ஜெயலலிதாவின் உடலும், எம்.ஜி.ஆரின் சமாதிக்கு அருகிலேயே அடக்கம் செய்யப்படவுள்ளது.
 
இப்படி, ஜெயலலிதாவிற்கும், அவரின் அரசியல் ஆசான் எம்.ஜி.ஆருக்கும்,  உள்ள ஒற்றுமைகள் இவையாகும்.