1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 19 மே 2023 (17:21 IST)

மது ஆலைகளை மூடாவிட்டால் புதிய தமிழகம் மூடும்: ஷ்யாம் கிருஷ்ணசாமி எச்சரிக்கை..!

தமிழகத்தில் உள்ள மது ஆலைகளை மூட வேண்டும் என்றும் அவ்வாறு மூடாவிட்டால் புதிய தமிழகம் கட்சி மூடும் என்றும் ஷ்யாம் கிருஷ்ணசாமி எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமியின் மகன் ஷ்யாம் கிருஷ்ணசாமி இன்று தனது சமூக வலைதளத்தில் ஒரு பதிவை செய்து உள்ளார். அதில்   புதிய தமிழகம் நாள் குறித்து விட்டது என்றும் ஜூன் 15ஆம் தேதிக்குள் சட்டவிரோத பார் விற்பனைகளை நிறுத்த வேண்டும் என்றும் இல்லையென்றால் புதிய தமிழகம் கட்சி நிறுத்தும் என்றும் தெரிவித்துள்ளார். 
 
அதேபோல் ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் தமிழகத்தில் உள்ள 19 தனியார் மது ஆலைகளை மூட வேண்டும் என்றும் இல்லை என்றால் புதிய தமிழகம் கட்சி மூடும் என்றும் தெரிவித்துள்ளார்.
 
ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள் தமிழகத்தில் மது கடைகளை மூடி மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று கூறிவரும் நிலையில் புதிய தமிழகம் கட்சியின் பிரமுகர் இந்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran