திங்கள், 18 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 11 அக்டோபர் 2023 (08:22 IST)

கர்நாடக அரசை கண்டித்து டெல்டா மாவட்டங்களில் கடையடைப்பு! – திமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு!

காவிரியில் தண்ணீர் திறந்துவிடாத கர்நாடக அரசை கண்டித்து டெல்டா மாவட்டங்களில் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.



கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு திறந்து விட வேண்டிய தண்ணீர் திறந்து விடப்படாததால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் மொத்தமாக குறைந்துள்ளது. இதனால் மேட்டூர் அணையில் நீர் திறப்பும் நிறுத்தப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அறிவுறுத்திய அளவு தண்ணீரை கர்நாடகா தரவில்லை.

காவிரியில் தண்ணீர் திறந்து விடாத கர்நாடக அரசை கண்டித்து விவசாய அமைப்புகள் இன்று டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் முழு கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

இந்த போராட்டத்திற்கு திமுக, தமிழக காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துளனர். மேலும் இன்று கும்பகோணம், பட்டுக்கோட்டை, பாபநாசம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபடவும் விவசாய அமைப்புகள் திட்டமிட்டுள்ளதால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

Edit by Prasanth.K