கோவில்களில் இருந்து, ரூ.1,153 கோடி எடுக்கப்பட்டுள்ளது: பொன் மாணிக்கவேல் அதிர்ச்சி தகவல்..!
அதிமுக மற்றும் திமுக ஆட்சியில் கோவில்களில் இருந்து வரி என்ற பெயரில் ரூ.1,153 கோடி எடுக்கப்பட்டதாக ஓய்வு பெற்ற ஐஜி பொன் மாணிக்கவேல் கூறிய தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஆருத்ரா கபாலீஸ்வரர் கோவிலின் தொன்மை அழிக்கப்பட்டதாகவும், கருவறையை சுற்றி இருந்த பழமையான சிலைகள் திருடப்பட்டு புதிய சிலைகள் வைத்ததாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
அதிமுக மற்றும் திமுக ஆட்சியில், கோவில்களில் இருந்து வரியாக ரூ.1,153 கோடி எடுக்கப்பட்டதாகவும், குறிப்பாக 2018 ஆம் ஆண்டில் ரூ.327 கோடி, 2019 இல் ரூ.348 கோடி, 2021 இல் ரூ.471.78 கோடி எடுத்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழக இந்து கோவில்களில் இருந்து மட்டும் ரூ.656 கோடி வரி எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதாவது மாதந்தோறும் ரூ.56 கோடி வரி விதிக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த தகவல் பலரிடத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Siva