Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஜாமீனில் வெளியே வந்த சேகர் ரெட்டிக்கு மீண்டும் சிறை


sivalingam| Last Updated: செவ்வாய், 21 மார்ச் 2017 (10:30 IST)
கடந்த நவம்பர் மாதம் மத்திய அரசு பணமதிப்பு இழப்பு நடவடிக்கை எடுத்தபோது புதிய ரூபாய் நோட்டுக்களை கணக்கு இல்லாமல்  சட்டவிரோதமாக வைத்திருந்தது, சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்தது ஆகிய குற்றச்சாட்டுக்களுக்கு ஆளாகிய சேகர் ரெட்டி கைது செய்யப்பட்டார்.


 


அப்போதைய முதல்வர் ஓபிஎஸ் அவர்களுக்கு நெருக்கமானவர் என்று கூறப்படும் இவர் சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் கொடுத்த நிபந்தனை ஜாமீன் காரணமாக வெளியே வந்தார். ஆனால் ஜாமீனில் வெளியே வந்த மூன்றாவது நாளே வேறொரு வழக்கில் கைது செய்யப்பட்டு அவரை மீண்டும் சிறையில் அடைத்தது காவல்துறை. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக ரூபாய் நோட்டுக்களை மாற்றிய வழக்கில் ஜாமீன் பெற்று வெளியே வந்த சேகர் ரெட்டியை  சட்டவிரோத பணப்பறிமாற்ற வழக்கில் போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். நீதிமன்றம் சேகர் ரெட்டியை வரும் 28ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :