பொம்மை ஆட்சிக்கு ஆதரவு தரும் வெட்கம் கெட்ட அதிமுக எம்.எல்.ஏ-க்கள்: கட்ஜூ முகநூலில் ஆவேசம்!!


Sugapriya Prakash| Last Updated: வியாழன், 9 மார்ச் 2017 (17:15 IST)
முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு அதிமுக எம்.எல்.ஏ-க்களை எதிர்த்து முகநூலில் பதிவிட்டுள்ளார். அதில் தமிழக மக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 
 
மார்க்கண்டேய கட்ஜு பதிவிட்டுள்ள முகநூல் பதிவு: தமிழர்களே, ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலமாக ஒட்டுமொத்த நாட்டையும் வியக்க வைத்து விட்டீர்கள். இப்போது தமிழ்நாடும், ஒட்டுமொத்த தேசமும், இன்னொரு ஹீரோயிசத்தை உங்களிடமிருந்து எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது.
 
பெங்களூர் சிறையிலிருந்துபடி ஆட்சியைக் கட்டுப்படுத்தும் குற்றவாளியின் பொம்மை ஆட்சிக்கு ஆதரவு தந்து கொண்டிருக்கும் எம்.எல்.ஏக்களுக்கு எதிராக சட்டபூர்வமாக, அமைதி வழியில் போராட்டம் நடத்த வேண்டும். 
 
அவர்களது வீடுகள், அலுவலகங்களுக்கு வெளியே நின்று போராடுங்கள், எதிர்ப்பைத் தெரிவியுங்கள். இந்த எம்.எல்.ஏக்கள் எங்கு போனாலும் விடாதீர்கள். அவர்களுக்கு கருப்புக் கொடி காட்டுங்கள். அவர்களை எந்த நிகழ்ச்சிக்கும் கூப்பிடாதீர்கள். சமூக ரீதியாக அவர்களைப் புறக்கணியுங்கள். 
 
தமிழ் மக்களின் வீரத்தை அவர்கள் உணர வேண்டும். அவர்கள் மாபெரும் மன்னர் ராஜராஜ சோழனின் வழி வந்தவர்கள் என்பதை இந்த எம்.எல்.ஏக்கள் உணரும்படி செய்ய வேண்டும் என்று கட்ஜு தமிழர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :